மாங்குளத்தில் பேருந்து விபத்து!


மாங்குளத்தில் அரச பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு பயணித்த பேருந்தே சாரதியின் உடல் நலக் குறைவு காரணமாக தடம் புரண்டு பாலத்துடன் மோதியுள்ளது.

சம்பவத்தில் பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

No comments