ஒரு மில்லியணைத் தாண்டியது ஸ்பெயின்!!


ஒரு மில்லியன் கொரோனா வைரஸ் தொற்றைக் தாண்டிய முதல் ஐரோப்பிய நாடாக ஸ்பெயின் மாறிவிட்டது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,973 என பதிவு செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு நேற்றுப் புதன்கிழமை அறிவித்துள்ளது. மொத்தமாக 1,005,295  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கையான 34,366 பேரும் உள்ளடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதியில் நாள் ஒன்றுக்கு 10,000 பேருக்கு பரவிய இந்த வைரல் தற்போது நாள் ஒன்றுக்கு 16,000 பேராக எட்டியுள்ளது.

No comments