60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசியைப் போட்டது சீனா! அதிர்ச்சியில் உலகநாடுகள்!


சீனாவில் 4 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவை பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த நிலையில்  இறுதிக்கட்ட சோதனையை முடிக்கும் முன்பாகவே சீனாவில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதை அந்தநாட்டின் அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது.

இதையொட்டி அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தியான் பாகுவோ நிருபர்களிடம் கூறுகையில்:-

60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட முடிவுகள், தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை காட்டுகின்றன”என குறிப்பிட்டார். 

சீனாவில் தடுப்பூசியின் மருத்துவ சோதனைகள் முடிவுக்கு வருவதற்கு முன்னரே 60 ஆயிரம் பேருக்கு போடப்பட்டு விட்டன என்பது உலக அரங்கை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

No comments