படையினரின் கல்வியியல் கல்லூரியிலும் கொரொனா?


யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோனையின் போதே அவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும்  பணிப்பாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து, தற்போது மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.

No comments