எல்லாவற்றிற்கும் ஜதேக காரணமாம்?

 


ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தை கையில் எடுத்திருக்காவிட்டால் தற்போது அரசாங்கம்  அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இந்த அரசியல் அமைப்பில் இன்று 20 ஆவது முறையாக  திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு முன்னதாக 19 தடவைகள்  திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 19 திருத்தங்களில் 17 திருத்தங்களை மேற்கொண்டது ஐக்கிய தேசிய கட்சிதான் என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.  நீங்கள்தான் அரசியலமைப்பி 17 தடவைகள்   திருத்தம் மேற்கொண்டீர்கள்.

நாங்கள் இரண்டு திருத்தங்களைத்தான் மேற்கொண்டுள்ளோம். நாம் இவற்றை கொண்டு வருவதற்கு காரணம்  அன்று நீங்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டமையினால்தான்.

இல்லையென்றால் நாம் அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்போவதில்லை. ஆகையினால் இந்த அரசியல் அமைப்பில் அதிகளவான திருத்தங்களை மேற்கொண்டது உங்களுடைய அரசாங்கத்தின் காலத்தில்தான் என நாம் எமது நிலைப்பாடு தொடர்பில்  உங்களுக்கு ஞாபகப்படுத்த  வேண்டும்” என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments