நெடுங்கேணியில் 3பேருக்கு கொரோனோ.!!



வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களிற்கு கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த ஊழியர்கள் பிரபல ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் நெடுங்கேணியின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் அவர்களில் 25பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பிசிஆர் பரிசோ தனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் 3பேருக்கு கோரோனோ தொற்று பீடித்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் தொழிலாளிகளும் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதுடன்  பல்வேறு இடங்களிற்கும் அவர்கள் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே கொரோனா பரவல் நாட்டில் தற்போது தீவிரமடைந்துவரும் நிலையில் ,இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்தவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது. ஆகையால் வடமாகாணத்தில் பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

1. சுகாதார அமைச்சினால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாக கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் வைபவங்களை தவிர்த்துக்கொள்ளவும் அல்லது பிற்போடவும்.

2. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைவாக, அலுவலகங்கள் , பொது நிறுவனங்களில் முககவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளி பேணுதல் , உடல்வெப்பநிலை அளவிடுதல் மற்றம் வருகை தருவோரின் விபரங்கள் பதிவேட்டினை பேணுதல் போன்றவற்றை இறுக்கமாகப் பின்பற்றவேண்டும்.


3. பொது இடங்களில் முககவசம் அணிதல் , சமூக இடைவெளி பேணுதல் கட்டாயமாக கடைபிடித்தல் வேண்டும். இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.


4. தவிர்க்கமுடியாத கட்டாயமாக நடாத்தப்படவேண்டிய நிகழ்வுகளை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான அங்கத்தவர்களுடன் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடாத்தப்படல் வேண்டும்.


5. வர்த்தக நிலையங்கள், சலூன்கள் உணவகங்கள் போன்றவற்றிற்கு ஏற்கனவே சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்


6. பொதுப்போக்குவரத்து வாகனங்களில் ஆசனங்களுக்கு அளவான பயணிகள் மட்டுமே பயணம் செய்யமுடியும்.


7. காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டைநோ உள்ளவர்கள் அலுவலகங்கள் அல்லது பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் வேண்டும்.


8. இயலுமானவரை நீண்டதூர பயணங்களை தவிர்த்தல் வேண்டும்.


9. பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை நடாத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை இறுக்கமாக கடைப்பிடிக்கவும்.


10. எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரம்பலை எமது மாகாணத்தில் கட்டுப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன என வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


No comments