யேர்மனியில் இருவருக்கு அனைத்துலக பிடியாணை


பனாமா பத்திரிகை Panama Papers கசிவால் அம்பலப்படுத்தப்பட்ட ஊழல் தொடர்பில் இருவருக்கு யேர்மனி அனைத்துலக பிடியாணை பிறப்பித்துள்ளது என யேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொசாக் பொன்சேகா நிறுவனர்களான ஜூர்கன் மொசாக் Juergen Mossack மற்றும் ரமோன் பொன்சேகா Ramon Fonseca ஆகியோருக்கே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வரி ஏய்ப்பு மற்றும் குற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறார்கள். 

குறித்த இருவரும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்கள் என யேர்மனிய நாளேடான சூட்டொச்சட் Sueddeutsche Zeitung நேற்று திங்கட்கிழமை பிற்பகல்  செய்தி வெளியிட்டுள்ளது. 

தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பாக இரண்டு அனைத்லுலக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொலோன் Cologne பொது வக்கீல் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

இதுவரை சந்தேகப்பட்ட இருவரும் எங்கிருக்கிறார்கள் என அடையாளம் காணப்படவில்லை. இவரும் பனாமா நாட்டு கட்வுச்சீட்டுக்களை வைத்திருக்கின்றனர். யேர்மனிக்கும் பானாமாவுக்கும் இடையில் ஒப்படைப்பு ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை.

மொசாக்கின் குடும்பம் யேர்மனியில் வசிப்பதால் குறைந்த தண்டணையைப் பெறுவதற்கும் அமெரிக்கக் குற்றச்சாட்டுக்களைத் தவிர்ப்பதற்கும் சரணடையக்கூடும் என விசாரணையாளர்கள் நம்புகின்றனர்.

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பனாமா பத்திரிகையில் கசிந்த தரவுகள் வெளிவந்திருந்தன. அதில் ஷெல் நிறுவனங்களின் சிக்கலான கட்டமைப்புகளைப் பயன்படுத்தி பரவலான வரி தவிர்ப்பு மற்றும் ஏய்ப்புகளை அம்பலப்படுத்தியது.

பனாமா பத்திரிகையில் வெளிவந்த தகவல்களை அடுத்து வரி ஏய்ப்பு அல்லது பணமோசடி குறித்து ஆராய 79 நாடுகளில் குறைந்தது 150 விசாரணைகள் திறக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க ஒருமைப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் வெளிவந்ததை அடுத்து 2018 ஆம் ஆண்டு மொசாக் பொன்சேகா நிறுவனத்தின் பெயருக்கு ஏற்பட்ட இழுக்கை சரி செய்ய முடியாத சூழலில் அந்நிறுவனம் மூடப்பட்டது.

இதனிடையே பனாமா அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் பல வரிவிதிப்பு கறுப்புப் பட்டியலை நீக்குமாறு மனுக்களைக் கையளித்து வருகின்றமை இங்கே குறிப்பிடக்தக்கது.


No comments