இலங்கையில் 190 பேருக்கு மேலும் கொரோனா!!


மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் மேலும் 190 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் முன்னதாக 832 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியிருந்தது.

இந்த நிலையில், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில், இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது.

No comments