ஆவா குழுவினர் கைது! 14 நாள் தடுப்புக் காவல்!


கிளிநொச்சியில் ஆவா குழுவினரைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நால்வரையும் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதியாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த நால்வரும் கிளிநொச்சியில் மூன்று வெவ்வேறு தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சியை சேர்ந்த வட்டக்கச்சி, பரந்தன், செல்வாநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இக்கைது நடவடிக்கை நேற்று முன்தினம் இடம்பெற்றதால் தாக்குதல் முயற்சிகள் இடம்பெறாது தடுக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் கூறியுள்ளர்.

No comments