வவுனியாவில் விபத்து!


வவுனியா நொச்சிமோட்டடையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் மோதுண்டுள்ளன. 

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பிக்கப் வாகனம் எதிரே வந்த மகிழுந்து ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டிருந்தது. இவ்விபத்தினால் பின்னால் வந்த பாரவூர்தி ஒன்றும் மோதுப்பட்டுள்ளது. விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments