மூக்கினால் உறுஞ்சும் கொரோனா தடுப்பு மருந்து!


கொரோனாவைப் பொறுத்தவரை ஊசி மூலம் செலுத்தப்படும் தடுப்பு மருந்துகளை விட மூக்கில் உறுஞ்சி நேரடியாக நுரையீரலுக்கு செல்லும் வகையிலான தடுப்பு மருந்துகள் நல்ல பலனைக் கொடுக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இம்பீரியல் கல்லூரி லண்டன் விஞ்ஞானிகளின் தயாரிப்பில் இருக்கும் தடுப்பு மருந்தும் முன்னனியில் இருந்து மூன்றாம் கட்ட சோதனைகளை எட்டிய மருந்துகளில் ஒன்று ஆகும். சர்வதேச அளவில் சுமார் 180 மருந்துகள் சோதனையில் இருந்தாலும் எதுவும் இறுதி கட்டத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மூக்கில் உறுஞ்சும் வடிவில் சுமார் 30 தன்னார்வலர்களுக்கு ஏரோசல் வடிவில் வழங்கப்படுகிறது.

முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் கிறிஸ் சியு இதைப் பற்றி கூறும்போது, “தற்போதைய தொற்றுநோய் சுவாச வைரஸால் ஏற்படுகிறது, இது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலை உள்ளடக்கிய செல்கள் மூலம் முதன்மையாக மக்களைப் பாதிக்கிறது. ஆகவே, தசைகளில் ஊசி வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடும்போது, நுரையீரலுக்கு நேரடியாக குறிவைப்பது பயனுள்ளதாக இருக்குமா என ஆய்வதும் முக்கியமானதே.” இம்பீரியல் தடுப்பூசி பற்றிய ஆராய்ச்சித் தலைவரான பேராசிரியர் ராபின் ஷாடோக் கூறும்போது, “உலகெங்கிலும் உள்ள பல ஆய்வுக் குழுவினர் தற்போது கோவிட் -19 தடுப்பு மருந்துகளுக்கான மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளன”. என்றார்.

வைரஸுக்கு எதிராக ஒரு முறையான நோயெதிர்ப்பு செயல்பாட்டை உருவாக்கும் திறனுள்ளதா என்பதை எங்களுக்குத் தெரிவிக்கும்.” இருப்பினும், இந்த சோதனைகள் மூக்கு, தொண்டை மற்றும் சுவாசபாதைகளில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பற்றி எதையும் இப்போதைக்கு சொல்ல வாய்ப்பில்லை – அங்கு தான் வைரஸ் முதன்மையாக செல்களைத் தாக்கி தொற்று ஏற்படுத்துகிறது.” இப்போதைக்கு மேற்படி சோதனைகள் மட்டுமே நமக்கு உரிய தகவல்களைத தரவியலும்.” என்றார்.

No comments