பதுங்கிக்கொண்ட டக்ளஸ்?


படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்த யாழ்.ஊடகவியலாளர்கள் கோரிய போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என சொல்லப்படும் பலர் விசா பெற்று வெளிநாடு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளார் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

யாழ்ப்பாணத்தில் மாவட்ட செயலகத்தில் அவர் இன்று ஊடகவியலாளர்களை சந்திதது பேசியிருந்தார்;.

அப்போது கடந்த காலத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட 39 வரையான ஊடகவியலாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போதே 'காணாமல் போனவர்கள் என சொல்லப்படும் பலர் விசா பெற்று வெளிநாடுகளிற்கு சென்றுள்ளார்கள். பலர் முகவரிகளை மாற்றிக் கொண்டு வசிக்கிறார்கள்' என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இதனிடையே கெஹலிய ரம்புக்வெலவுடன் அனைத்து இடங்களிலும் இணைந்து திரிந்த டக்ளஸ் தேவானந்தா ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் ஒதுங்கிக்கொண்டார்.

ஊடகப்படுகொலைகள் தொடர்பில் பேசப்படுகின்ற போது தனது தலை உருள்வதை தவிர்க்கவே டக்ளஸ் சந்திப்பில் பங்கெடுக்கவில்லையென தெரிவிக்கப்பட்டது.

எனினும் இhஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன்  ஆகியோர் சந்திப்பில் பங்கெடுத்திருந்தனர்.


No comments