மருத்துவரின் முகக்கவசத்தை இழுத்த பிறந்த குழந்தை! கொரோனாவிலிருந்து உலகம் விடுதலையா!


உலகெங்கும் தற்போது முகக் கவசம் அணிவது நடைமுறை வாழ்க்கையில் அவசியமாகி உள்ளது. பல ஆர்வலர்களும் முகக் கவசம் அணிவதன் அவசியம் பற்றி கூறி வருகின்றனர்.   முகக் கவசம் அணியத் தேவை இல்லாத எதிர்காலம் எப்போது வரும் என மக்களிடையே ஏக்கம் பிறந்துள்ளது.

அதற்கு நம்பிக்கை அளிப்பது போல் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவர் சமீர் சாயிப் என்னும் மருத்துவர் ஒரு மகப்பேற்றுச் சிகிச்சை செய்துள்ளார்.   அப்போது பிறந்த குழந்தை அவருடைய முகக் கவசத்தைப் பிடித்து இழுத்துள்ளது.  இந்த புகைப்படத்தை சமீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் நாம் அனைவரும் எதிர்ப்பர்த்த முக கவசம் அகற்றுவது குறித்த நம்பிக்கையை அளிக்கும் குழந்தை இதோ எனா குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.  சமூக வலைத் தளங்களில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பகிர்வோர், “விரைவில் நாம் கொள்ளை நோயைத் தோற்கடித்து பழைய வாழ்க்கைக்குச் செல்வோம் என்னும் நம்பிக்கையைப் புகைப்படம் அளித்துள்ளது.  பிறந்த சிசு ஒன்று முகக் கவசத்தை வெறுக்கிறது என்னும் இந்த அழகிய புகைப்படம் இந்த வருடத்தின் சிறந்த புகைப்படம்” எனப் புகழ்ந்துள்ளனர்.

No comments