வள சூறையாடல்கள்! வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் - சி.வி


வடக்கில் கிழக்கில் இடம்பெற்றுவரும் வள சூரையாடல்களுக்கு எதிராக உடனடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுமக்கள் தொடர்பு அலுவலகம் ஒன்று நேற்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்குகளில் நாம் தோல்வியடைந்தாலும் இங்கு இருக்கும் நிலைமையை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்ட முடியும் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments