20:நினைவழியா நிமல் !படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20வது ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஐனின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்று யாழ் ஊடக அமையத்தில் அதன் ஸ்தாபகர் இரத்தினம் தயாபரன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.நிமலின் திரு உருவப்படத்திற்கான மலர்மாலையினை அவரது உடன்பிறவா சகோதரன் அணிவிக்க பொதுசுடரை ஆர்வலர் பார்த்தீபன் ஏற்றி வைத்தார்.

ஊடகவியலாளர் செல்வகுமார் மலரஞ்சலி செலுத்தியதையடுத்து அனைத்து ஊடகவியலாளர்களும் மலரஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே வவுனியா ஊடக அமையத்தின் சார்பில் வவுனியாவில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதே போன்று கிழக்கிலும் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


யாழ்ப்பாணம் சுண்டுகுளியில் இதே நாளன்று ஈபிடிபி கும்பலால் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments