யாழில் சமூகத்தொற்றாகின்றதா?


புங்குடுதீவு பகுதியில் தொற்றுக்குள்ளான யுவதியின்; திருமண நிச்சயதார்த்த நிகழ்விலும் மற்றைய தனிமைப்படுத்தப்பட்ட யுவதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டவர்கள் தொடர்பில் தேடுதல் தொடங்கியுள்ளது.ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேச மக்கள் இது தொடர்பில் தகவல் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையேமினுவங்கொட பகுதியில் கொவிட்-19 தொற்றிய பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய தாதி, யாழ்ப்பாணம் நோக்கி கடந்த 3 ஆம் திகதி உத்திரதேவி ரயிலில் பயணித்துள்ளார். இவர் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து முற்பகல் 11.55 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். இவர் ரயிலில் முதலாம் வகுப்பு பெட்டியில் பயணித்துள்ளார். முதலாம் வகுப்பில் பயணித்தவர்கள் வடமாகாண சுகாதார திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.


No comments