திலீபன் பற்றி கதைக்க டக்ளஸிற்கு அருகதை இல்லை?

தியாகி திலீபன் தொடர்பில், அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்த கருத்தை தாம்  வன்மையாக கண்டிப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ்

விடுதலைப் புலிகள் கட்சியின் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் க.இன்பராசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமக்கு எதிராக போரிட்ட சிங்கள ஆட்சியாளர்களே புலிகளையும் அவர்களது தியாகங்களையும் பாராட்டும் போது கொலை,ஆட்கடத்தல்,கம்பம் கோரலில் ஈடுபட்ட டக்ளஸ் போன்ற துரோகிகள் முன்வைக்கும் கருத்துக்களை கருத்தில் கொள்ள தேவையில்லையெனவும் தெரிவித்துள்ளார்.


No comments