தொடங்கியது கொழும்பு தூக்கியடிப்பு?

 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவிக்கு முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவருக்குப் பதிலாக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பில் முரண்பாடான அறிக்கைகளை இரு சந்தர்ப்பங்களில் ஜாலிய சேனாரத்ன ஊடகங்களுக்கு வழங்கியதாலேயே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments