பிரான்சில் ஆசிரியர் கொலை! 10 பேர் கைது!

  


பிரான்சில் ஆசிரியர் ஒருவரின் தலை துண்டித்த தாக்குதலாளி பாடசாலைக்கு வெளியே  வீதியில் காத்திருந்து மாணவர்கள் மூலம் அடையாளப்படுத்திய பின்கழுத்து அறுத்துப் படுகொலை செய்துள்ளார் என பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட 47 வயதான ஆசிரியரான சாமுவேல் பாட்டி Samuel Paty என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாக்குதலாளி முஹம்மது நபி அவர்களின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை தனது மாணவர்களுக்குக் காட்டி சாமுவேல் பாட்டி என்பவரின் படங்களை அந்த நபர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார்.

தாக்குதல் நடத்தியவர் பின்னர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர் எயர் கண் Air Gun என அழைக்கப்படும் துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கிச் சுட்டார் என காவல்துறையினர் கூறியிருக்கின்றார்கள்.

இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புகள் குறித்து 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

பாரிசிலிருந்து வடமேற்கில் சுமார் 30 கி.மீ (20 மைல்) தொலைவில் உள்ள கான்ஃப்லான்ஸ்-சைன்ட்-ஹொனொரின் நகரில் அமைந்துள்ள டு போயிஸ் டி ஆல்னே என்ற பாடசாலையில் சாமுவேல் பாட்டி ஆசிரியராக கற்பித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments