கொரேனாவா?கஞ்சாவா? கலங்கும் வடமராட்சி!



தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் பின்னர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பருத்தித்துறை கடற்பரப்பில் வழமையான கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் இன்று (22) காலை ஈடுபட்டிருந்த கடற்படையினரால் சந்தேகத்திடமான மீன்பிடிப் படகு ஒன்றின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து குறித்த படகை நெருங்கி நடத்த்திய விசாரணையில் அதில் இருந்த மூவரது நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அம்மூவரையும் கைது செய்து படகையும் கைப்பற்றியுள்ளனர்.


மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழ்நாட்டிற்கு சென்று அங்கிருந்து கேரள கஞ்சாவினை வாங்கி வந்ததாகவும் கடற்படையினரை கண்டதும் கடலில் போட்டுவிட்டு நின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து கடலில் நடத்திய தேடுதலில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட நிலையில் கடலில் போடப்பட்ட 82 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

No comments