யாழ்ப்பாணத்தில் பயமில்லை?


யாழ்ப்பாணத்தில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவருக்கே கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சமூக தொற்றுக்கு வாய்ப்பில்லை.இதனால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறையில் புங்குடுதீவு மாணவி பயணித்த பேருந்தின் நடத்துநருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குடாநட்டு மக்களிடையே அச்சமேற்பட்டுள்ளது.

இதனிடையே யாழில் சமூகத் தொற்று என மக்கள் அச்சமடையத் தேவையில்லை.

எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறையினை பின்பற்றுவது அவசியம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ .கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments