றிசாத் கைது!



முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குற்ற விசாரணைப் பிரிவினரால் தெஹிவலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து சென்றமையின் ஊடாக அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து ரிசாட் பதியுதீனை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து கடந்த சில நாட்களாக 6 பொலிஸ் குழுக்கள் அமைத்து ரிசாத் பதியுதீன் தேடப்பட்டும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அவர் ஓடி ஒளிந்து விட்டதாகவும், அரசாங்கமே அவரை பாதுகாப்பதாகவும், எதிர்க்கட்சியே பாதுகாப்பதாகவும் பல வதந்திகள் வெளியாகின.

இதனிடையே தெஹிவளை பகுதியில் வைத்து இன்று (19) அதிகாலை கைதுசெய்யப்பட்ட நாடாளுன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன், அடிப்படை விசாரணைகளை அடுத்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



No comments