வடக்கு நோக்கி வருகின்றது கொரோனா?இலங்கை முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை இன்று மாலை 201ஆகியிருக்கின்றது.

இதனிடையே வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் மேலும் 7 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவ்வகையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12ஆகியிருக்கின்றது.

இதனிடையே அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களில் ஒருவர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் உயர் அதிகாரியான பெண் ஊழியர் ஒருவரின் மகன் என்று தெரியவந்துள்ளது. பூநகரி ஜெயபுரம் கிராமத்தில் அவர் இனம் காணப்பட்டுள்ளார்.


No comments