கிளிநொச்சி இளைஞனுக்கு கொரோனா?



வவுனியா வடக்கு நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணியில்ஈடுப்பட்டிருக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் நிறுவனம் ஒன்றில்மூன்று நபர்களுக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினை தொடர்ந்துஅங்கு பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த வகையில் குறித்த இளைஞனும் அவரது
குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில்இன்று கிடைக்பெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் படி குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதிஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கடந்தஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில்அமைந்துள்ள விசேடதேவையுடைய சிறுவர் இல்லத்திற்கு வந்து சென்றுள்ளார். இதனையடுத்து குறித்த சிறுவர் இல்லம் மற்றும் அங்கு பணியாற்றுகின்றவர்கள் அவர்களின் குடும்பங்கள் ஆகியோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே தற்போது கொரோனா தொற்று பரவல் நிலைமையினை கருத்தில் எடுத்து பொதுமக்கள் வெளியில் நடமாடுவதனை முடிந்தளவு தவிர்க்குமாறும், கண்டிப்பாக முககவசம் அணிவதோடு, சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுமாறும் சுகாதாரதுறையினர் கோரிவருகின்றனர்.

No comments