செம்புகளிற்கு பலத்த சேதம்?


தமிழரசில் எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு தரப்பை களையெடுக்க மாவை தரப்பு மும்முரமாகியுள்ளது.

இந்நிலையில் முகநூலில் பதிவு போட்ட குற்றச்சாட்;டினில் முன்னாள் மாவை ஆதரவாளரும் தற்போதைய சுமந்திரன் அணி முக்கியஸ்தருமான வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினரான ஹரிகரன் தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மாவையின் ஆதரவாளர்கள் பலரும் கடந்த தேர்தலில் சுமந்திரன் பக்கம் பாய்ந்திருந்தனர்.

ஆயினும் தேர்தலில் ஒரு இலட்ச விருப்பு வாக்கை பெறுவதாக சவால் விட்ட சுமந்திரன் கடைசியில் சசிகலா ரவிராஜ் ஆசனத்தை தட்டிப்பறிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.

மறுபுறம் தேர்தல் தோல்வியின் பின்னர் களையெடுப்பில் மாவை குதித்துள்ள நிலையில் தற்போது வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினரான ஹரிகரன் தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


No comments