மன்னாரில் 200 கிலோ கஞ்சா?


கொரோனா கூத்துக்களை தாண்டி இன்று (18) மன்னார் ஒலைத்தொடுவாயில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கை கடற்படை மற்றும் இலங்கை காவல்துறையினர் 200 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் போது,  200 கிலோ மற்றும் 825 கிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விநியோகிக்கும் நோக்கத்துடன் கடலால் கடத்தப்பட்ட கேரள கஞ்சாவின் பங்கு, கடற்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

10 பொலிதீன் சாக்குகளில் அடைத்த 94 பொதிகளில் கஞ்சா எடுத்துச் செல்லப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கொவிட்-19 க்கான தடுப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து கேரள கஞ்சா, மன்னார் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களைத் தேடி கடற்படை மற்றும் காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாம்.


No comments