யாழிற்கு வர தடை:நவீ னசந்தையும் மூடல்?


யாழ்ப்பாணம் நவீன சந்தை கட்டட தொகுதியில் உள்ள கடைகள் மூடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன .

நேற்று தொற்று இனங்காணப்பட்ட நபரின் உறவினர்களின் கடைகள் 4 யாழ்ப்பாண நகரில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதோடு குறித்த நான்கு கடைகளுடனும் ஏனைய அழகு சாதன பொருட்கள் விற்கும் கடையினர் தொடர்புகளைப் பேணியதன் காரணமாக இன்றைய தினம் நவீன சந்தைக் கட்டிடத் தொகுதி முடக்கப்படலாம். யாழ்ப்பாண மாநகர முதல்வர், யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி, போலீசார் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடிவருகின்றனர்.

இதனிடையே யாழ்ப்பாண நகரத்திற்கு வெளிமாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார். 
இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்த பகுதியை முடக்குவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருடன் தான் கலந்துரையாடவுள்ளதாகவும் குறித்த மாநகர பகுதியில் தொற்று ஏற்படாவண்ணம் முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை உடனடியாக ஆராயும் படி ஆளுநர் பணித்தமைக்கு அமைய குறித்த நடைமுறை இன்றிலிருந்து பின்பற்றப்படும் எனவும்  தெரிவித்தா

No comments