டில்லி-லண்டன்! ஆரம்பமாகிறது உலகின் மிக நீண்ட பேருந்துப் பயண சேவை!


இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கான பேருந்து உல்லாசப்பணம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 70 நாட்கள் பயணிக்கும் இப்பயணத்தில் 20 பேர் மட்டும் பேருந்தில் பயணிக்கலாம்.

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் ஆரம்பிக்கும் இப்பேருந்துப் பயணம் தரைவழியாக 18 நாடுகளைக் கடந்து 70 நாட்கள் 12,000 மைல்கள் தூரம் பயணித்து பிரித்தானியாவின் தலைநர் லண்டனை வந்தடையும் எனக் கூறப்பட்டுள்ளது.

இப்பேருந்தில் கழிப்பறை வசதிகள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. பயணி ஒருவர் 20,000 அமெரிக்க டொலர்களை பயணக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இப்பணம் 2021 ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. இது வரலாற்று பதிவான உலகின் தொலைதூரப் பேருந்து பயணமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பேருந்து மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, லாட்வியா, லிதுவேனியா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் வழியாக லண்டனைச் சென்றடையும்.

No comments