கவனயீர்ப்புப் போராட்டம்! சுவிஸ் பேர்ண்

அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினைமுன்னிட்டுசிறிலங்காப் படைகளாலும்,துணை இராணுவக் குழுக்களினாலும் வலிந்துகாணாமல்

ஆக்கப்பட்டஉறவுகளைத் தேடி சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளானஓகஸ்ற் 30ம் திகதியினைமுன்னிட்டுசிறிலங்காப் படைகளாலும்,துணை இராணுவக் குழுக்களினாலும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டஉறவுகளைத் தேடி 31.08.2020 திங்கள் அன்றுசுவிஸ் பேர்ண் மாநிலத்தில் கவனயீர்ப்புஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது.

தற்போதுநிலவும் அசாதாரண சூழலிலும் அரசின் சுகாதாரவிதிமுறைகளைப் பின்பற்றிசுவிஸ் தமிழர் அரசியல்துறை, இளையோர் அமைப்பு,பெண்கள் அமைப்பினரால் ஒருங்கிணைத்துஏற்பாடுசெய்யப்பட்ட இவ் கவனயீர்ப்புநிகழ்வில் கனத்த இதயங்களுடன் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பொதுச்சுடர்,அகவணத்துக்கடன் ஆரம்பமாகிய இவ் ஒன்றுகூடலில் சிங்களப் பேரினவாதஅரசினால் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டஎம் உறவுகளைமீட்டுத்தருவதற்குஅனைத்துலகம் முன்வரவேண்டும் என்னும் கோரிக்கையினைமுன்வைத்துகண்காட்சிமற்றும் வேற்றினமக்களுக்கானதுண்டுப்பிரசுரவிநியோகமும் இடம்பெற்றதுகுறிப்பிடத்தக்கதாகும்.

No comments