வவுனியாவில் எறிகணைகள்!!

வவுனியா வடக்கு கட்டையர்குளம் மதியாமடு பகுதியில்  கிணற்றில் இருந்து எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தனியார் காணிஒன்றில் அமைந்துள்ள கிணறுஒன்றை அதன் உரிமையாளர் இன்று துப்புரவு செய்துள்ளார்.

இதன்போது கிணற்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த நிலையில், புளியங்குளம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் எறிகணைகளை மீட்டுள்ளனர்.
No comments