பிரித்தானியாவில் நடைபெற்ற திலீபனின் 6ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு

எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம். என்ற தேசியத் தலைவரின்

சிந்தனையில் வாழ்ந்துகாட்டிய மாவீரனின் 33ம் ஆண்டின் 6ம் நாள் வணக்க நிகழ்வு இன்று.

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற முக்கிய குறிக்கோளுடன்

* பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் மற்நும் சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

* புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

* இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படுகின்ற சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

* வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

* இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடி கொண்டுள்ள இராணுவ பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும். போன்ற 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஒரு துளி நீரும் இன்றி சாகும் வரை உண்ணாவிரதமிருந்து வீரச் சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் திலீபன் அவர்களின் 6ம் நாள் வணக்க நிகழ்வு தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழ் இளையோர் அமைப்பினரால் இனைய வழிமூலமாக நடாத்தப்பட்டிருந்தது.

மாவீரர்களுக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டு திலீபன் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டு தீபவணக்கம் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது அதைத்தொடர்ந்து எழுச்சி உரைகள், கவிதை, திலீபன் அண்ணாவின் நினைவுகள் தாங்கிய பாடல்கள் என்பன அரங்கேறியிருந்தது.

சுவிட்சர்லாந்து நாட்டின் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு கொலம்பஸ் அவர்கள் நிகழ்வில் கருத்துரையினையும் ஜேர்மன் Berlin மாநிலப் பொறுப்பாளர் திரு குமணன் அவர்கள் நினைவுரையினையும் வழங்கியிருந்தார்கள்.
No comments