யேர்மனி வூப்பற்றாலில் நடைபெற்ற திலீபனின் 6ஆம் நாள் நினைவலைகள்

யேர்மனி வூப்பெற்றால் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் ஆறாவது நாள் உண்ணாநோன்பு நினைவலைகள்.

தியாக தீபம் திலீபன் அவர்களின் ஆறுவது நாள் உண்ணாநோன்பின் நினைவலைகள் யேர்மனியின் முக்கிய நகரமாகிய வூப்பெற்றால் நகரமத்தியில் நினைவுகூரப்பட்டது. தியாக தீபத்தின் ஆறாவது நாள் என்பது அவருடன் இருந்த மக்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கிய நாள், தண்ணீர் கூட அருந்தாத ஆறாவது நாள் அவரின் உடல் தளர்ந்து நா வரண்டு தமிழீழ தாகம் கண்ணொளி வளியாக அத்திடலில் விடுதலைத் தாகத்துடன் இருந்தவர்களை உரம் ஏற்றிய நாள்.

சனநாயகம் பேசிக்கொண்டு சர்வாதிக்க ஆட்சி நடத்தும் நயவஞ்சக அரசுகளின் கபடத்தனங்களை தமிழீழ மக்களின் ஆழ்மனதில் ஆழமாகப் பதியவைத்துக் கொண்டிருந்தான் திலீபன்.கண்ணிர் மல்க காத்திருந்த மக்கள் இக்காட்சிகைளை எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

இன்று தமிழீழமக்களை இனப்படுகொலை செய்தவன் ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு அகிம்சை என்றால் என்னவென்று உலகத்திற்கே பறைசாற்றிய தீயாக தீபம் லெப்.கேணல் திலீபனுக்கு மலர் தூவி தீபமேற்றுவதற்கு தன் நீதிமன்றங்கள் ஊடாகத் தடை விதித்திருக்கும்போது.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொள்ளை நோயான கொரோனா கிருமியின் அச்சுறுத்தலால் புலம்பெயர் தேசங்களிலும் மண்டபங்களுக்குள் மக்கள் கூடி தியாக தீபம் திலீபனுக்கு மலர்தூவ கொரோனா விதிமுறைகள் மறுக்கின்ற நிலையில்,

யேர்மனிவாழ் மக்களுடன் இளையவர்கள் இணைந்து திலீபனின் தியாக வேள்வியை யேர்மனிய நகரமத்திக்கு எடுத்து வந்தனர். 

அந்த வகையில் இன்று ஆறாவது நகரமாக வூப்பெற்றால் நகரம் தெரிவு செய்யப்பட்டு அந்நகரத்தின் மத்தியில் திலீபனுக்கு மாலை சூட்டி, மலர் தூவி, சுடர் ஏற்றினார்கள். இவர்களுடன் அந்நகரத்தின் நடைபாதைகளில் வந்த வேற்றின மக்களும் இணைந்து தியாக தீபத்திற்கு மலர் தூவினார்கள். 

யேர்மனிய மொழியினில் திலீபனின் தியாக வேள்ளி விபரமாக எழுதப்பட்டிருந்தது. அதைக் கண்ணுற்றவர்களுக்கு இளையவர்கள் விளக்கமளித்தார்கள்.

தியாக தீபத்தின் ஏழாவது நாளான நாளை 21 .9.2020 திங்கட்கிழமை இவ் நிகழ்வானது யேர்மனி முன்ஸ்ரர் நகரமத்தியில் நடைபெறயிருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments