நோர்வேயில் நடைபெற்ற திலீபனின் நினைவேந்தல்

பன்னிருநாள் நீராகாரமின்றி தமிழினத்தின் உரிமைக்காக உயிர் நீத்த தியாகதீபம் திலீபனின் 33ம் ஆண்டு நினைவுவணக்கமும் வான்படைகளை உருவாக்குவதற்கு முதுகெலும்பாக இருந்த கேணல் சங்கர் அவர்களின் நினைவுவணக்கமும் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் நோர்வே தமிழர்வள ஆலோசனை மையத்தின் மண்டபத்தில் உணர்வோடு நடைபெற்றது.

இந்நிகழ்வில் திலீபனின் நினைவு சுமந்த விபரணம், கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த விபரணம், பாடல்கள், நடனங்கள் என கலைப்படைப்புகள் திலீபனின் விடுதலைக்கான வரலாற்றுப்பயணத்தின் காத்திரமான பக்கங்களை புரட்டிக்காட்டியது. நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்கள் ஒன்றுகூடி விடுதலைக்கான வீரர்களை நினைவு கூர்ந்தார்கள். நிகழ்வின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கைப் பாடல் மாவீரர்களின் கனவினை நெஞ்சிலே நிறுத்தியது.

முன்னர் நோர்வே தமிழ் இளையோர்களால் அடையாள உண்ணாநிலைப்போராட்டம் அன்னைபூபதி பாடசாலைக்கு அருகாமையில் நடைபெற்றிருந்தது.


No comments