புதையல்! விளக்கமறியலில் 11 பேர்!


மட்டக்களப்பு வாழைச்சேனை பொத்தானை வயல் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று சனிக்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று சனிக்கிழமை (12) அதிகாலை குறித்த வயல் பிரதேசத்தில் சுற்றிவளைத்து சோதணையிட்டபோது புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்ததுடன் புதையல் தோண்டப் பயன்படுத்திய அலவாங்கு மண்வெட்டி மற்றும் பூஜை பொருட்கள் என்பனவற்றை மீட்டனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை அதிரடிப்படையினர் பொலிசாரிடம் ஒப்படைத்ததையடுத்து இவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

No comments