பாரிசில் கத்திக்குத்து! இருவர் படுகாயம்!

பாரிசில் கத்திக்குத்து இலக்காகி இருவர் காயமடைந்துள்ளனர். நையாண்டிப் பத்திரிகையான சார்லி ஹெப்டோவின் முன்னாள் அலுவலகங்களுக்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகத்தின் பெயரில் பாகிஸ்தான் அடியைக் கொண்ட 18 வயதுடைய இளைஞர் ஒருவருடன் மேலும் 6  பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இத்தாக்குதல் ஒரு பயங்கரவாதச் செயல் எனக் கூறப்பட்டுள்ளது.

படுகாமடைந்த ஆணும் பெண்ணும் ஒரு தொலைக்காட்சி நிறுவனததில் பணி புரிகின்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நையாண்டிப் பத்திரிகையான சார்லி ஹெப்டோ மீதான 2015 ஆம் ஆண்டு தாக்குதலை நடத்துவதற்கு இரண்டு ஜிஹாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட 14 பேர் மீது ஒரு உயர் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் இக்கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.No comments