மாந்தை கிழக்கில் சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

 தொழில் தகைமையை ஏற்படுத்தும் நோக்கில் நிர்மாண கைத்தொழில்

அபிவிருத்தி அதிகார சபையினால் (CIDA) 2016 – 2020 வரையான காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


செயற்றிட்டத்தின் கீழ், மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மேசன் பயிற்சி நெறியினை 2016-2017 வரையான காலப்பகுதியில் பூர்த்தி செய்தவர்களுக்கான NVQ Level 2 மற்றும் NVQ Level 3 தர சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

NAITA மற்றும் NHDA ஆகியவற்றின் அனுசருனையில் இடம்பெற்ற இச் செயற்றிட்டத்தில் குறித்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்டு மேசன் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில்,

தொழிற்தகமை பயிற்சி நெறியினை பூர்த்தி செய்துள்ள 55பேர் NVQ Level சான்றிதழ்களைப் பெற தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் 15 பேர் தமக்கான சான்றிதழ்களை பெற்றுக் கொண்டுள்ள நிலையில் ஏனையவர்களுக்கான சான்றிதழ்கள் கிராம சேவகர் ஊடாக வழங்கப்படவுள்ளன.


மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்,

CIDA மாவட்ட இணைப்பாளர், உத்தியோகத்தர்கள், தொழிற்தகமையை நிறைவு செய்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments