மகிந்த அசையக்காணோம்?

கோத்தாவுடன் முரண்பட தொடங்கியுள்ள மகிந்தவை தூக்கியடித்த பின்னர் பஸிலை அரசியலில் களமிறக்கும் கோத்தா ஆதரவு பெரமுன தரப்பின்

முயற்சி பிசுபிசுத்துள்ளது.

பிரதமர் பதவியில் இருந்து விலகும் எவ்வித எண்ணமும் இல்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச இரண்டு வருடங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

எனினும், அவ்வாறான எவ்வித எண்ணமும் தமக்கு இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

தம்மை மக்கள் ஐந்து வருடங்களுக்கு தெரிவு செய்துள்ளதாகவும், பதவிக்காலம் நிறைவடையும் முன்னர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லையெனவும் பிரதமர் கூறியுள்ளார்.

அழுத்தங்கள் ஊடாக மகிந்தவை தூக்கியடிக்க செய்திகளை கசியவிட்ட தரப்பின் முயற்சிகள் இதன் மூலம் பிசுபிசுத்துள்ளது.


No comments