யாழில் வாள்வெட்டு! ஒருவர் படுகாயம்!


யாழ்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற வாழ் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் நாயன்மார்க்கட்டு பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த நபர் இன்று காலை கல்வியங்காடு பகுதியில் நின்றுக்கொண்டிருந்த போது, மூன்று உந்துருளியில் வந்த மற்றொரு கும்பல், அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments