டைனமைட் குச்சிகளுடன் இருவர் கைது!


திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் உள்ள கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள கடற்கரை பிரதேசத்தில் 17 டைனமைட் குச்சிகளை விற்பனை செய்ய முயற்சித்த இருவரை நேற்று புதன்கிழமை மாலை அதிரடிப்படையினர் கைது காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சம்பூர் பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் அவர்கள் சம்பூர் முதலாம் வட்டார பிரதேசவாசியான 28 வயதுடையவரும், நாலாம் வட்டாரத்தைச்சேர்ந்த 32 வயதானவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட டைனமைட் பொருட்கள் விற்பனைக்காக கொண்டு செல்லும் நோக்கத்தில் தயார் நிலையில் உள்ள போதே கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் செய்தி வெளியிட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட 17 டைனமைட் குச்சிகளையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் இன்று மூதூர் நீதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments