கைகலப்பில் முடிந்தது கிரிக்கெட்! இருவர் மருத்துவமனையில்!

வவுனியா காந்திநகர் பகுதியில் கிரிகெட் விளையாட்டில் ஈடுபட்ட இரு விளையாட்டுக் கழக கழகங்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காந்திநகர் விளையாட்டு மைதானத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது.

இரு கழகங்களுக்கிடையே மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இடம்பெற்றது. விளையாட்டின் இடையே இரு கழக அணியினருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. வாய்த் தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்களுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments