கொலையாளிக்கு மாற்றீடு?

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்கு பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்த

சொக்கா மல்லி என்று அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் சென்று சத்தியபிரமாணம் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் கொலை குற்றச்சாட்டில் மரண தண்டனை அனுபவித்து வருகிறார்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவோ சத்தியபிரமாணம் செய்யவோ வாக்களிக்கவோ அனுமதிக்க முடியாது என சட்டமா அதிபர் எழுத்து மூலம் நீதி அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

எனினும் பிரேமலால் தனக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால் அவருக்கு பாராளுமன்றம் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தாமரை மொட்டு கட்சி தெரிவிக்கின்றது.

எனினும் சிலவேளைகளில் பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள முடியாது போனால் அவருக்கு பதிலாக புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால் அதில் உள்ள சிக்கல், இரத்தினபுரி மாவட்டத்தில் தாமரை மொட்டு கட்சியில் அடுத்த விருப்பு வாக்கு பட்டியலில் இருவர் ஒரே வாக்குகளைப் பெற்று உள்ளனர். சனி ரோகன கொடிதுவக்கு மற்றும் ரஞ்சித் பண்டார ஆகியோர் 53,261 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் புதிய உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் நாணய சுழற்சி முறையில் தீர்வு எட்டப்படும் என தேர்தல்கள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments