வாழ்வாதாரத்தை அழித்துவிட வேண்டாம்


யாழ் பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் அங்காடி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட வேண்டாம் என யாழ் மாநகர முதல்வருடனம் கோருவதாக குறித்த பகுதியில் தொழில் செய்யும் அங்காடி வர்த்தகர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அவர்கள்  மேலும் தெரிவிக்கையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணியில் தாம் தமது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த கடைகளை அகற்றுமாறு யாழ் மாநகர முதல்வர் எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தனர்
.
கடந்த காலங்களில் யாழ் மாநகர சபையும் அதன்பின் இலங்கை போக்குவரத்து சபையும் தம்மிடம் வாடகைளை அறவிட்டதாகவும் தற்போது ஒரு வருடமாக யாழ் மாநகர சபை வாடகை அறவிடாமல் தம்மை சட்டவிரோதமாக கடை நடத்துவோர் எனக் கூறி குறித்த பகுதியில் இருந்து 14 நாட்களுக்குள் எழம்புமாறு  யாழ் மாநகர முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா பாரம்பரிய கைத்தொழில் அமைச்சராக இருந்த போது தெருவில் நின்ற அங்காடி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக குறித்த பகுதியில் கடைகள் அமைக்க அனுமதி தந்தார்.

 குறித்த இடம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக உள்ளதால் யாழ் வந்த இலங்கை போக்குவரத்து சபைத் தலைவரிடம் குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்தோம்
.
அவர் குறித்த பகுதி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான இருப்பதால் வாடகையை இ.போ.ச வை வேண்டுமாறு கூறியதுடன் மத்திய அரசாங்கத்தை கட்டுப்படுத்துகிற அதிகாரம் மாநகர சபைக்கு இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி க் காலப்பகுதியில் முளைத்த செய்தியால் குறித்த அங்காடி வர்த்தகத்தை நம்பி வாழ்கின்ற 137 குடும்பங்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது.


 ஆகவே அங்காடி வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை அழித்து விடாமல் அவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்று இடம் ஒன்றை தொழில் செய்வதற்கு வழங்கிவிட்டுஅவர்களின் கடைகளை அகற்ற முற்படுமாறு யாழ் மாநகர முதல்வருடன் பணிவாக கேட்டுக் கொள்கிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

No comments