வந்தது நாடாளுமன்றில் 20! செம்மலைக்கு பெயர் பலகை?


அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்ட மூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் இன்று (22) சற்றுமுன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது எதிர்க்கட்சியினர் 20வது வேண்டாம் என்ற சுலோகம் அடங்கிய பட்டிகளை கட்டி, பதாகைகளை தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனிடையே நீதிமன்ற உத்தரவை மீறி, செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில், பிக்கு ஒருவர் பெயர்ப் பலகை நாட்டியுள்ளார்.  


தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர், அங்குள்ள பிக்கு ஒருவர், “இரஜமகாராம விஹாரை” என்ற பெயர்ப் பலகையை சீமேந்து கலவை போட்டு அமைத்துள்ளார்.

இது தொடர்பில், நீராவியடிப் பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினரால், நேற்று முன்தினம் (21), முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


No comments