இந்திய இழுவை படகால் மூழ்கடிக்கப்பட்ட உள்ளுர் படகு?
வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உள்ளுர் மீனவர்களது படகு இந்திய மீன்பிடி இழுவைப்படகினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

படகிலிருந்து பருத்தித்துறை முனை பகுதியை சேர்ந்த  மூன்று இந்திய மீன்வர்களும் மயிரிழையில் உயிர் தப்பித்துள்ளனர்.

நேற்றிரவு வழமை போல மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே வேகமாக வந்த இந்திய மீன்பிடி இழுவைப்படகே வேண்டுமென உள்ளுர் மீனவர்களது படகை தாக்கிவிட்டு தப்பித்து சென்றுள்ளது.

படகு இரண்டாக பிளந்து மூழ்கியுள்ள நிலையில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்களை அயலில் தொழில் ஈடுபட்டிருந்த சக மீனவர்களால் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.


No comments