தியாகி திலீபன் நினைவு நிகழ்வு – சிட்னி /குயின்ஸ்லாந்து /பேர்த் /மெல்பேர்ண்

தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 33வது ஆண்டு நினைவு நிகழ்வு, செப்ரம்பர் மாதம் 26 ஆம் நாள்

சனிக்கிழமை (சிட்னி/ குயின்ஸ்லாந்து/ பேர்த் இல்) இடம்பெறவுள்ளது.

ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான். தமிழ் மக்களின் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, திலீபன் மேற்கொண்ட பயணம் எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது.

பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தற்போதைய கொறானாவைரஸ் இடர்கால நிலையை கருத்திற்கொண்டு, அரச விதிமுறைகள், சமூக இடைவெளியை பேணியவாறு இவ்நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும்.

நிகழ்வுகளில் நேரடியாக கலந்துகொள்ள முடியாதவர்கள் ஏனைய மாநிலத்தவர்கள் இணையவழி ஊடாகவும் இணைந்துகொள்ளமுடியும்.

ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து தமிழின விடுதலைக்காக பன்னிரு நாட்கள் நீராகாரம் இன்றி தன்னுடலை வருத்தி, அகிம்சையின் உச்சத்தை தொட்டு உயிர்நீத்த

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் 33ம் ஆண்டு நினைவுகளில்....

Sydney

இடம்: Yaarl Function Hall, Pendle Hill, NSW
காலம்: 26/09/2019 சனிக்கிழமை மாலை 5 மணி.
தொடர்பு: ‎0401 842 780 or 0424 757 814

Queensland

இடம்: St. Paul’s Drive Woodbridge Qld 4114
காலம்: 26/09/2019 சனிக்கிழமை மாலை 5 மணி.
தொடர்பு: ‎0415 159 283 or 0469 888 511

Perth

பன்னிரு நாட்கள் எமக்காக தன்னை பசித்தீயில் உருக்கி அணைந்த தியாகதீபத்தின் நினைவுநாள் நிகழ்வு எதிர்வரும் 26.09.2020 சனிக்கிழமை மாலை 6.30 மணிமுதல் 8.00 மணிவரை வணக்கநிகழ்வு மேற்கு அவுஸ்திரேலியாவில் 6, Third Avenue, Rosmoyne, WA 6148 என்ற முகவரியிலுள்ள “இலங்கைத் தமிழ் சங்கத்தில்” ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Melbourne & Other States

விக்ரோரிய மாநில தற்போதைய கொறானாவைரஸ் இடர்கால நிலையை கருத்திற்கொண்டு, ஒஸ்ரேலியாவின் ஏனைய மாநிலங்களில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுடன் இணையவழி ஊடாக இணைந்துகொள்வோம்.

தொடர்பு: 0433 002 619
Zoom Link:   https://zoom.us/j/9865054335
Facebook: TCCAustralia (https://www.facebook.com/tccaustralia/ 

நிகழ்வு ஏற்பாட்டுக்குழு,
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – (சிட்னி/குயின்ஸ்லாந்து /மேற்கு அவுஸ்திரேலியா /விக்ரோரியா)


THIYAAGI THILEEPAN" Memorial Events committee  

மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com +


No comments