அரசியல் யாப்பு விரைவில்?


புதிய அரசமைப்பின் நகல்வடிவை அடுத்த ஆறுமாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிக்கும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நியமித்த 9 உறுப்பினர்கள் விசேட குழு ஏற்கனவே தனது செயற்பாடுகளைஆரம்பித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் முதலாவதுநகல்வடிவம் ஆறு மாதங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதுவரையில் 19வது திருத்தத்தினால் ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்புகளை களைவதற்காக 20வது திருத்தம் கொண்டுவரப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பினை உருவாக்கும் நடவடிக்கையின் போது நிபுணர்கள் எதிர்கட்சியினர் உட்பட அனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள் கோரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் புதிய அரசமைப்பைகண்மூடித்தனமான விதத்தில் ஒருதலைப்பட்சமாக உருவாக்கமாட்டோம் என தெரிவித்துள்ள அமைச்சர் அரசமைப்பு பல தசாப்தங்கள் நீடிக்கின்ற விடயம் என்பதால் அனைவரினதும் கருத்தினை உள்வாங்குவோம் என அவர்தெரிவித்துள்ளார்.

ஆறுமாதங்களில் அரசமைப்பி;ன் நகல்வடிவம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் புதியஅரசமைப்பினை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அவர்தெரிவித்துள்ளார்.

19திருத்தத்தினால் உருவான சூழ்நிலையில் நல்லாட்சி எப்படி ஆபத்தான விதத்தில் நாட்டை ஆட்சிபுரிந்ததுஎன்பதை மக்கள் உணரச்செய்வது அவசியம் என அமைச்சர்தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகள் மூலம் அம்பலமாகியுள்ளது போன்று 19 திருத்தம் காரணமாக தேசிய பாதுகாப்பு பெரிதும் பாதிக்கப்பட்டது என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தின் மூலம் தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி முன்னையஜனாதிபதியும் பிரதமரும் ஒருவரின் செயற்பாடுகளை மற்றவர் குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.



 

No comments