சோம்பல் முறித்து புறப்பட்ட கூட்டணி?

தேர்தல் பின்னடைவின் பின் முடங்கியிருந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒருவாறாக சோம்பல் முறித்து மக்களை சந்திக்க புறப்பட்டுள்ளது.

இக்கட்சியின் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று கிளிநொச்சில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மக்கள் சந்திப்பு இன்று காலை 10 மணி முதல் மதியம் தாண்டியும் கிளிநொச்சி சேவைச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அருந்தவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேர்தலின் பின்னராக ஈபிடிபி,சுதந்திரக்கட்சி மற்றும் சுமந்திரன் தரப்பு மக்கள் சந்திப்புக்களை முன்னெடுத்துவருகின்ற போதும் முன்னணி உட்கட்சி சண்டையில் மூழ்கியுள்ளது.

கூட்டணியோ சோம்பல் முறித்து மக்கள் சந்திப்புக்களை ஆரம்பித்துள்ளது.No comments