முஹம்மது சப்தார் கான் சந்திப்புஇலங்கையில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் முஹம்மது சப்தார் கான் (Colonel Muhammad Safdar Khan) நேற்று  (24) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.


இலங்கையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கர்னல் முஹம்மது சப்தார் கான் நியமிக்கப்பட்ட பின்னர் கடற்படைத் தளபதியுடன் மேற்கொண்டுள்ள முதல் உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.


புதிதாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகரை வாழ்த்திய கடற்படை தளபதி, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால உறவு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான பரஸ்பர நலன்களைப் பற்றி கூறினார்.


No comments