வரலாற்றை திரிபுபடுத்தும் கும்பல்?குட்டிமணி, தங்கத்துரை போன்ற டெலோ அமைப்பின் தலைவர்கள் படகு மூலம் தமிழ்நாடு தப்பிச் செல்ல ஆயத்தமாக இருந்தபோது 1981 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தபோதும்  உண்மையில் அவர்களை கைது செய்த பொலிஸாரிற்கு அவர்கள் யார் என்பது பற்றி தெரிந்திருக்கவில்லை. சாதாரண கடத்தல் காரர்கள் என்றே கருதி அவர்களை கைது செய்து காவலில் வைத்திருந்தனர்.

முன்னதாக குட்டிமணி தனது கைத்துப்பாக்கியினால் தனது தலையில் சுடமுயன்றபோது தங்கத்துரை அதனை தட்டிவிட்டுள்ளார்.ஆனாலும் சிறிய சூட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.அதற்குச்சிகிச்சைக்காக மந்திகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சமயம் ஒரு தமிழ்ப்பொலிஸ்காரரால் குட்டிமணி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில்; எப்போதும் போராட்டத்திற்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு கம்பு சுத்துபவர்கள் வழமைபோலவே குட்டிமணி, தங்கத்துரை போன்ற தலைவர்களை பொலிஸாரிற்கு காட்டிக்கொடுத்தவரென புதிய கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இதே கதையை ஒரு இருபது வருடங்களுக்கு முன்னர் டக்கஸ் தேவானந்தா கூறிக்கொண்டிருந்தார்.இப்போது அதனை புலம்பெயர் தேசத்திலுள்ள சில புலன்பெயர்ந்தவர்கள் குட்டிமணியின் மனைவியின் பிரிவின் பின்னராக கதைகளை எழுத தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments