வலி.வடக்கு மீண்டும் நாடகங்கள்?


வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை வைத்து வங்குரோத்து அரசியல் செய்வது மாறி மாறி ஆட்சியிலிருக்கின்ற தரப்புக்களது நடவடிக்கை.

முன்னர் மகிந்த,மைத்திரி,ரணில் என தொடரும் நாடகம் மீண்டும் தற்போது மகிந்த தரப்பிடம் மீண்டும் வந்துள்ளது.


முன்னர் மகிந்தவுடன் டக்ளஸ் கதை விட்டு செல்ல தற்போது காட்சி மாறி அங்கயன் சகிதம் அது அரங்கேற தொடங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த கிராமிய வீடமைப்பு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த இன்று மீள்குடியேற்ற மக்களின் வீடு, காணி மற்றும் வாழ்வாதாரம் சம்மந்தமான பிரச்சனைகள் தொடர்பாக நேரடியாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதனுடன் சம்மந்தப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று ஆராய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


காலை 10 மணிக்கு சுன்னாகம் சபாபதி நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை மீண்டும் உடனடியாக சொந்த காணிகளில் வீடமைத்து மீள் குடியேற்றல் சம்மந்தமாக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.


இவ் விஜயத்தின் போது அமைச்சின் செயலாளர், யாழ் மாவட்ட அரச அதிபர் க. மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன், பிரதேச செயலகர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


வலி.வடக்கிலிருந்து வெளியேறிய மக்கள் சொந்த இடம் செல்ல அனுமதிக்காத இராணுவம் அவர்கள் பற்றி அக்கறையற்றுள்ளது.


இராணுவத்தளபதியோ வலிவடக்கில் ஒரு அங்குலத்தையும் விடுவிக்க மாட்டோமென சவால் விடும் நிலையில் தற்போது அங்கயன் அமைச்சரென நாடகம் புதிய அரங்கில் அரங்கேறியுள்ளது.


No comments